இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு அரசு வேலை இல்லை என அஸ்ஸாம் அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது!!
2021 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு எந்த அரசாங்க வேலைகளும் வழங்கப்பட மாட்டாது என்று அசாம் அமைச்சரவை முடிவு செய்ததுள்ளது. திங்கள்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் வெளியிடப்ப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் புதிய நில சீர்திருத்தக் கொள்கை மற்றும் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனடிப்படையில் நிலமற்ற பழங்குடி மக்களுக்கு வேளாண்மை செய்யவும் வீடு கட்டவும் நிலம் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் தந்தது.மேலும், அரசு வழங்கும் இலவச நிலத்தை 15 ஆண்டுகாலத்துக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
அத்துடன் 2021 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பதற்கான ஒப்புதலையும் அமைச்சரவ கொடுத்துள்ளது. தற்போதைய அரசு ஊழியர்களும் இதனை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இனி இல்லை என்பது அம்மாநிலத்தில் புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டு அஸ்ஸாம் சட்டசபை தீர்மானத்தின்படி பெண்களுக்கு பல்கலைக் கழக படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment