குரூப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 21, 2019

குரூப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் ஏன்?

குருப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.



இதுகுறித்து, அதன் செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்ட விளக்கம்: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.


அதன் அடிப்படையிலேயே, தீவிரமாக விவாதித்து குரூப் 2 தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.



தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள், தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டன



. பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment