சீன அதிபருக்காக வந்திருக்கும் 4 சொகுசு காரின் சிறப்பம்சங்கள் என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 10, 2019

சீன அதிபருக்காக வந்திருக்கும் 4 சொகுசு காரின் சிறப்பம்சங்கள் என்ன?

சீன அதிபர் ஜி ஜின்பிங், மாமல்லபுரம் வருகை தரும் நிலையில் அவர் பயன்படுத்தப் போகும் நான்கு சொகுசு கார்கள் சரக்கு விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.

 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கியிருந்து இருநாட்டு உறவு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு மாமல்லபுரம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. நகரம் முழுக்க காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

இந்த நிலையில் 747 சரக்கு விமானம் மூலமாக சீனாவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அதிநவீன ஹாங்கி எல் 5 ரகத்தைச் சோந்த நான்கு கார்கள் வந்து இறங்கின.

இது தொடர்பாக விசாரித்த போது, சாட்டிலைட் செல்லிடப்பேசி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் மற்றும் குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்கள் சீன அதிபரின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டது என்று தெரிகிறது.

 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் ஜி ஜின்பிங். இதையடுத்து அவர் தனது பாதுகாப்பு மிகுந்த காரில், ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வார்.'' என்ற சீன ஹாங்கி நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடம்பர காரை சீன அதிபர் பயன்படுத்தி வருகிறார்.

இந்த கார் புறப்பட்ட வெறும் 8 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை தொடக் கூடியது. 18 அடி நீளமும், 6.5 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்ட இந்த காரின் எடை 3152 கிலோ. ஹாங்கி எல் 5 ரகத்தைச் சோந்த காரில் 105 லிட்டர் பெட்ரோல் அல்லது எரிவாயு நிரப்பிக்கொள்ளலாம். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் 500 மைல்கள் வரை பயணிக்க முடியும். 'ஹாங்கி எல்-5' ரக கார் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த காராகும். இதன் விலை 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ.5.60 கோடி).

இந்த கார் வந்த விமானத்திலேயே ஷி ஜின்பிங்குக்கு பாதுகாப்பு வழங்கும் சீன ராணுவத்தின் பாதுகாப்பு பிரிவைச் சோந்த அதிகாரிகளும் வந்தனா்.

No comments:

Post a Comment