400 வீடுகள்,1260 கார்கள்: ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுத்து அசத்திய கலக்கல் முதலாளி! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 26, 2019

400 வீடுகள்,1260 கார்கள்: ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுத்து அசத்திய கலக்கல் முதலாளி!

சூரத் நகரத்தை சேர்ந்த கோடீஸ்வரர் சாவ்ஜி தோலாக்கியா ஒவ்வொரு தீபாவளிக்கும் தனது ஊழியர்களுக்கு போனசாக விலையுயர்ந்த பரிசுகளை அளிப்பதில் பெயர் போனவர். ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சாவ்ஜி, வைரம் மற்றும் ஜவுளித்துறையில் தொழில் புரிபவர்.


 இந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் தனது ஊழியர்களுக்கு என்ன பரிசு அளிக்கப்போகிறார் என்று பலரும் காத்திருந்தனர். இந்த ஆண்டு 400 வீடுகள், 1260 கார்கள் என்று தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பரிசு அளித்து அசத்தியுள்ளார் சாவ்ஜி.


“இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 1716 ஊழியர்களை தேர்வு செய்தோம். அவர்களில் சிலருக்கு வீடுகளும், கார் இல்லாதோருக்கு கார்கள் வழங்கவும் முடிவெடுத்துள்ளோம்,” என்று சாவ்ஜி ஐஏஎன்எஸ் பேட்டியில் கூறியுள்ளார்.
சாவிஜி’இன் நிறுவனம் இந்த ஆண்டு தனது பொன்விழாவை கொண்டாடுகிறது.



தீபாவளி போனசுக்காக மட்டும் சுமார் 51 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர் இவர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு தவணையான மாதம் 5000 ரூபாயை இவரது நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். சாவ்ஜியின் ஊழியர்கள் இவரை பிரியத்துடன் எதிர்நோக்குகின்றனர்.


“ப்ளாட்டின் விலை 15 லட்ச ரூபாய் மட்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊழியர்கள் மாதத்தவணையாக ரூ.11,0000 மட்டும் கட்டி வந்தால் போதும், வீடு அவர்களுக்கு சொந்தமாகிவிடும்.”
ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸில் சுமார் 5500 ஊழியர்கள் உள்ளனர். ஆண்டு விற்றுமுதலாக 6000 கோடி ரூபாயை ஈட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு இவர் தனது ஊழியர்கள் 491 பேருக்கு கார் மற்றும் 200 பேருக்கு ப்ளாட்டுகளை தீபாவளி போனசாக வழங்கி செய்திகளில் இடம்பெற்றார். இந்தியன் எக்ஸ்பிரஸ்’க்கு பேட்டி அளித்த சாவ்ஜி,


“வைரத்தை பட்டை தீட்டுபவர்களை நான் ஊழியர்களாக நினைப்பதில்லை என் குடும்ப உறுப்பினர்கள் போலத்தான் பார்க்கிறேன். அவர்களும் நான் வாழும் இதே இடத்தை சேர்ந்தவர்கள்தான், அதனால் அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப பரிசுகள் வழங்குகிறோம்,” என்றார்

No comments:

Post a Comment