இந்தியாவில் 41% பால் தரமற்றவை ! உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 19, 2019

இந்தியாவில் 41% பால் தரமற்றவை ! உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 41 சதவீத பால் தரமற்று விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்களின் வாழ்வில் இன்றியமையான உணவாக மாறி உள்ளது பால். பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை அனைவருக்கும் அடிப்படை உணவாக எடுத்துக் கொள்வது பால். பாலில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், எலும்புகளுக்கு மிகவும் நல்லது என்றும், வைட்டமின் சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் , புரதச்சந்த்துக்கள் உள்ளதால் அனைவரும் பாலை விரும்பி பருகுகின்றனர்.


ஆனால், அந்த பாலிலும் கலப்படம் செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தேசிய பால் பாதுகாப்பு மற்றும் தர ஆய்வு 2018 ன் கீழ் பரிசோதிக்கப்பட்ட பால் மாதிரிகளில் 93% பால் மாதிரிகள் மனித நுகர்வுக்கு பாதுகாப்பானவை என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) கண்டறிந்துள்ளது.


அத்துடன், ' 41 சதவீத பால் தரமற்று விற்பனை செய்யப்படுவ தாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி உள்ளது. பரிசோதிக்கப் பட்ட மொத்த 6,432 பால் மாதிரிகளில், சுமார் 456 மாதிரிகள் தேர்வில் தோல்வியடைந்தன.

விற்பனை செய்யப்படும் 41% பால் மாதிரிகள் குறைந்தபட்ச தரத்துடன் கூட இல்லை

7% பால் மாதிரிகள் குடிக்க உகந்ததாக இல்லாமல் குடிப்பவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கிழைக்கும் வகையில் உள்ளது.

நாடு முழுவதும் 6,432 பால் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வில் 368 மாதிரிகளில் (5.7%) Aflatoxin M1 குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமாக உள்ளது.

Aflatoxin M1 என்பது ஒரு வகையான பூஞ்சை.


இது டெல்லி, தமிழ்நாடு, கேரளாவில் விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் அதிக அளவில் கலந்திருப்பதாகவும் இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

1.2 சதவீத பால் மாதிரிகளில் ஆண்டிபயாடிக் கலந்ந்துள்ளது. இதன் அடிப்படையில் 7 சதவீத பால் மாதிரிகள் குடிக்க உகந்தவை அல்ல.

77 சதவீத பால் மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஆண்டிபயாடிக் அதிகளவில் கலந்ந்துள்ளது.

கேரளாவில் ஒரு பால் மாதிரியில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.பால் தர நிர்ணயத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியது அவசியம் என தற்போது உணர்த்தப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்ப ஆணையம் தெரிவித்துள்ளது.

பாலில் கலப்படம் செய்துள்ள தகவல் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


ஏற்கனவே தமிழகத்தில் தனியார் பால்களில் அதிக அளவு ரசாயனம் கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment