பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்:கலெக்டர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 24, 2019

பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்:கலெக்டர் அறிவிப்பு

பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று ஒடிசா மாநிலத்தில் கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநில மக்களிடையே பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகியவை குறித்த மூடநம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் அங்குள்ள கோபாபூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையை அவமதித்த ஆறு பேரின் பல்லை பிடுங்கி, மலத்தை உண்ண வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.


அதேபோல ெஜகன்னாத் பிரதா பகுதியிலும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களிடையே நிலவும் பேய், பிசாசு குறித்த மூட நம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கஞ்ஜம் மாவட்ட ஆட்சியர் விஜய் அனிருத், ‘‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment