மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை அடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை முதன்மைச் செயலர் எஸ். கிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவு:
'தமிழக அரசு ஊழியர்களுக்கு 1-01-2019 அன்று முதல் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது
. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்தி ஜூலை 1 முதல் அதை அளிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் தமிழக அரசும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 12 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக அடிப்படை ஊதியத்தில் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படியான 5 சதவீதம் ஜூலை 1-ம் தேதியை அடிப்படையாக வைத்து முன் தேதியிட்டு வழங்கப்படும்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2019 வரையிலான தொகை உடனடியாக பணமில்லாப் பரிவர்த்தனை முறையில் இசிஎஸ் முறையில் உடனடியாக வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு ஏற்கெனவே அகவிலைப்படி பெறும் அனைத்து முழு நேர ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். பகுதி நேர ஊழியர்களுக்கு இது பொருந்தாது'.
இவ்வாறு நிதித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment