தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 23, 2019

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுஇந்த மருத்துக்கல்லூரிகளை அமைக்க மொத்தம் ரூ. 325 கோடி செலவாகும் . இதில் 80 சதவீத தொகையை அதாவது ரூ. 195 கோடியை மத்திய அரசு தனது பங்காக வழங்க உள்ளது.

அதேசமயம் மாநில அரசின் பங்காக ரூ. 130 கோடி இருக்கும்.

இதற்கான அதிகாரபூர்வ ஒப்புதலானது முறைப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூலம், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment