அடுத்த ஆண்டு இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 1, 2019

அடுத்த ஆண்டு இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!

நீண்ட காலமாக தங்களது ஐஃபோன் ஆப்பரேஷன் சிஸ்டத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சன்களுக்கு மாறாத ஐபோன் பயனர்கள், இப்போதாவது அதை உடனடியாகச் செய்து முடிக்க புதிதாக ஒரு காரணம் கிடைத்திருக்கிறது.


அதாவது, உங்கள் iOS 8 சாதனத்தில் தற்போது வாட்ஸ்அப் செயலி இருந்தால், உடனடி செய்தி தளத்திலிருந்து புதுப்பித்தலின் படி, பிப்ரவரி 1, 2020 வரை மட்டுமே நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு பதிப்புகள் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய பயனர்கள் இனி புதிய கணக்குகளை உருவாக்கவோ, இருக்கும் கணக்குகளை மறுபரிசீலனை செய்யவோ முடியாது என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.


 இருப்பினும், பழைய வெர்ஷனில் இருப்பவர்கள் பிப்ரவரி 1, 2020 வரை தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும்.IOS 8 இல், நீங்கள் இனி புதிய கணக்குகளை உருவாக்கவோ அல்லது இருக்கும் கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவோ முடியாது" என்று வாட்ஸப் அப்டேட் கூறுகிறது.


எனவே ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை இயக்க iOS 9 அப்டேட்டேட் வெர்சன் தேவைப்படும். எனவே, 'சிறந்த அனுபவத்திற்காக, இனி உங்கள் தொலைபேசியில் கிடைக்கும் iOS இன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்," என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.


அதுமட்டுமல்ல, 'குறுக்கு வழியில் பயன்படுத்தப்படும் ஆப்பிள் ios ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது அன்லாக்டு சாதனங்களின் பயன்பாட்டை நாங்கள் வெளிப்படையாகக் கட்டுப்படுத்தவில்லை.


இருப்பினும், இந்த மாற்றங்கள் உங்கள் சாதனத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்பதால், ஐபோன் ஆப்பரேஷன் சிஸ்டத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சன்களுக்கு மாறாத ஐபோன் சாதனங்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்க முடியாது" என்றும் வாட்ஸ் அப் கூறியுள்ளது.

No comments:

Post a Comment