அரசு ஊழியர்களுக்கான தீபாவளி பரிசு வரம்பு உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 22, 2019

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி பரிசு வரம்பு உயர்வு

தீபாவளி பரிசை ஏற்றுக் கொள்ள, மத்திய அரசு ஊழியர்களுக்கான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:



குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை பரிசாக பெறுவதற்கு, அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு உள்ளது.
இதற்காக உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை, அரசின் அனுமதியோடு மட்டுமே பெற வேண்டும்

.இந்நிலையில், தீபாவளி பரிசு பெறுவதற்கான, மத்திய அரசு ஊழியர்களுக்கான உச்ச வரம்பு உயர்த்தப்படுகிறது. 'ஏ' மற்றும் 'பி' பிரிவினருக்கான உச்ச வரம்பு, 1,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.அதே நேரத்தில், 'சி' பிரிவினருக்கான வரம்பு, 500 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.


இந்தியக் குடிமைப் பணிகள், இந்திய போலீஸ் சேவை, இந்திய வன சேவை அதிகாரிகளுக்கு இணையாக உயர்த்தும் வகையில், இந்த மாற்றம் செய்யப்படுகிறது.அதேபோல், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பரிசுகள் பெறுவதற்கான விதிமுறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment