பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் பெறத் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
2020 மார்ச், ஏப்ரலில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்க உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன் கருதி, பிற மாணவர்கள் போல் அவர்களும் தேர்வு எழுத சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைபாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்
.விண்ணப்பிக்கலாம்உடல்குறைபாட்டின் அடிப்படையில் தேர்வு எழுத சலுகைகள் கேட்கும் மாணவர்கள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை நகல் அல்லது மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை தலைமையாசிரியர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே 10 ம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வு எழுத சலுகைகள் பெற்ற ஆணையின் நகலையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்.,31 க்குள் அனுப்ப வேண்டும்.தாமதமாக விண்ணப்பங்கள் பெறும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
முதன்மை கல்வி அலுவலர்களால் பரிந்துரைக்கப்படும் பட்டியல் மட்டுமே பரிசீலிக்கப்படும். பரிந்துரையின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment