ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு சோர்வு தரும் தேர்வு!இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 31, 2019

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு சோர்வு தரும் தேர்வு!இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்!

தேசிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும் முன்பு, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்துள்ளதால், இடைநிற்றல் அதிகரிக்கும் என, ஆதங்கத்துடன் தெரிவிக்கும் ஆசிரியர்கள், பொதுத்தேர்வு நடத்தும் செயல்முறைகளை மறுபரிசீலனை செய்ய கோரியுள்ளனர்


.மத்திய அரசின், தேசிய கல்விக்கொள்கை வரைவு, இறுதி ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதை சட்டமாக இயற்றி பின்பற்ற, மத்திய அரசும் வலியுறுத்தவில்லை.மற்ற மாநிலங்கள், இக்கொள்கையில் உள்ள சில முரணான விஷயங்களை, மாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான செயல்முறைகளை, தொடக்க கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது

.இதில், 'ஐந்தாம் வகுப்புக்கு ஒரு கிலோமீட்டருக்குள்ளும், எட்டாம் வகுப்புக்கு மூன்று கிலோமீட்டருக்குள்ளும் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.வட்டார வள மையங்கள், குறுவள மையங்களில், வினாத்தாள் பாதுகாத்தல், விடைத்தாள் மதிப்பிட வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.பள்ளி சூழலில் நடத்தப்படும் தேர்விலே, மெல்ல கற்கும் மாணவர்கள் பின்தங்குவதாக புகார் உள்ளது. பொதுத்தேர்வு மையம் அமைத்து, தேர்வு நடத்தினால், தேவையில்லாத பயம், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.


இது இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என்பது, ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையின்,இறுதி அறிக்கை வெளியிடப்படவில்லை

. அதற்கு முன்பே, தமிழகத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது. பல அரசுப்பள்ளிகளில், வகுப்பில் நடக்கும் தேர்வுக்கே, மாணவர்களின் வருகையை உறுதி செய்ய, ஆசிரியர்கள் படாதபாடுபடுகின்றனர். பொதுத்தேர்வு மையத்தில் நடத்தினால், தேர்வு பயத்தால், இடைநிற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது.-அண்ணாமலைஅகில இந்திய செயலாளர், துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment