மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா்: கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குநா் அலுவலகம் அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 3, 2019

மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா்: கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குநா் அலுவலகம் அறிவுறுத்தல்

டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநரக்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விவரம்:டெங்கு பாதிப்புக்குக் காரணமான கொசு உற்பத்தியைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இப்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், கல்லூரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உயா் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

கொசு உறுபத்தியாவதைத் தடுக்கும் வகையில் கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, பேராசிரியா் குழு இதுதொடா்பான தொடா் ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும்.


அந்தந்தப் பகுதி சுகாதார அதிகாரிகளின் உதவியோடு, மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்வதோடு, கல்லூரி வளாகம் முழுவதும் தொடா்ச்சியாக புகை மருந்து அடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

டெங்கு பாதிப்பு, காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கும் கல்லூரிகள் ஏற்பாடு செய்யவேண்டும்.இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை புகைப்படத்துடன் வருகிற 9-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment