கலைத்திருவிழா அறிவிப்பு தாமதம்: அனைத்து பள்ளிகளும் எதிர்பார்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 7, 2019

கலைத்திருவிழா அறிவிப்பு தாமதம்: அனைத்து பள்ளிகளும் எதிர்பார்ப்பு

காலாண்டுத்தேர்வு முடிந்தும், கலைத்திருவிழாவுக்கான அறிவிப்பு இல்லாததால், பள்ளி நிர்வாகத்தினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மாநில அரசின் சார்பில், கடந்த இரண்டு கல்வியாண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ், அனைத்துப்பள்ளிகளிலும், இசை, நடனம், நாடகம், வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்டவற்றில், தனித்திறன் கொண்ட மாணவர்களுக்கு போட்டிகளை கல்வித்துறை நடத்துகிறது.ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களுக்கும் இவ்விழா நடத்தப்படுகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட, கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவு, 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது.இப்போட்டியில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, கூடுதலாக சில நிகழ்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.


ஒளிப்படம், கம்ப்யூட்டர் வரைகலை, செண்டை மேளம், கோணக் கொம்பு, ஜலதரங்கம், கீ போர்டு, வீதி நாடகம், மைம் குழுவாக மற்றும் தனியாக, கம்ப்யூட்டர் மூலம் கலைக் களஞ்சியம் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி அளவிலான போட்டிகள் அக்., மாதத்தில் நடப்பதற்கு செப்., மாதம், கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு விடும். இம்முறை, கலைத்திருவிழா நடத்துவது குறித்து இதுவரை அறிவிப்பு இல்லை. இது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.

No comments:

Post a Comment