ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 21, 2019

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிப்பதற்கான உத்தரவை நிதித் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.



அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் போதே, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.


ஆனால், இப்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டபோதும், ஓய்வூதியதாரர்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அதற்கான அரசு உத்தரவு (அரசு உத்தரவு எண்: 154) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.


நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு விவரம்:-


அடிப்படை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தில் 17 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.


ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையானது உடனடியாக பெற்று மின்னணு தீர்வு சேவை மூலமாக வழங்கப்படும் என்று தனது உத்தரவில் நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Click here to download GO

No comments:

Post a Comment