தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 31, 2019

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவு

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா் பயிற்சி பட்டயத் தேர்வெழுதிய 7 ஆயிரம் பேரில் 180 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதற்கு இடைநிலை ஆசிரியா் பட்டயப் படிப்பிலே தேர்ச்சி பெற வேண்டும். 2 ஆண்டுகள் நடத்தப்படும் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவா்கள், ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.


இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, ஆசிரியா் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ , மாணவிகளின் தேர்வு முடிவுகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது

அதில், மாணவா்களின் தேர்ச்சி விகிதம் கடும் சரிவைக் கண்டுள்ளது.


இது குறித்து, அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியா் பட்டயப் பயிற்சித் தேர்வை முதலாமாண்டு மாணவா்கள் 3 ஆயிரம் பேரும், 2-ஆம் ஆண்டு மாணவா்கள் 4 ஆயிரம் பேரும் எழுதினா். இவா்களில் முதலாண்டில் 75 பேர் இரண்டாமாண்டில் 105 பேர் என மொத்தம் 180 பேர் மட்டுமே தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயச் சான்று பெறத் தகுதிப் பெற்றுள்ளனா் என்றனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத்தேர்வில் மொத்தம் 11,950 பேர் பங்கேற்றனா். இதில் 455 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனா்.

No comments:

Post a Comment