உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு? திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 30, 2019

உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு? திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.


அந்தக் குழந்தையை மீட்கும் பணி கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில், 80 மணிநேர போராட்டடத்திற்குப் பிறகு செவ்வாய் அதிகாலை குழந்தை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியது.இதற்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு என ஒரு தொகை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களால் செய்தி பரவியது.


இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, 'ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ரூ.5 லட்சம் தான் செலவானது.


சுஜித் மீட்புப் பணிக்காக ரூ.10 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை; மீட்புப்பணிக்காக செலவிட்ட தொகை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை' என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment