அரசு அங்கீகாரமின்றி ஆசிரியர் பணியிடத்துக்கான புதிய தகுதிப்படிப்பை சென்னை DAV பள்ளி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள DAV ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய தாளாளர் வசந்தா பாலசுப்பிரமணியம், தமிழகத்தில் B.Ed., முடித்து வரக்கூடிய பட்டதாரிகளில் போதிய அளவுக்கு தகுதியானவர்கள் கிடைக்கப் பெறாததால், புதிய டிப்ளமோ தகுதிப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள PG டிப்ளமோ படிப்புக்கு ஆண்டுக்கட்டணமாக 80 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த புதிய தகுதிப்படிப்புக்கு அரசின் அங்கீகாரம் பெறவில்லை என்றும் கூறி அதிர்வை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு தங்களிடம் இதே டிப்ளமோ படிப்பை படித்த 23 பேர் சென்னையில் பல்வேறு தனியார் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் பெருமையாக தெரிவித்தார்.
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டப்படி ( RTE 2009 ), அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் கண்டிப்பாக மத்திய அரசு அல்லது மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், எந்தப் படிப்பைப் படித்தவர்களும், பிஎட்., அல்லது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் கூட DAV பள்ளியின் தகுதிப்படிப்பை முடித்து விட்டு 1முதல் 10 ஆம் வகுப்புவரை எந்த பாடமும் நடத்தும் ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று DAV பள்ளியின் தாளாளர் வசந்தா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

No comments:
Post a Comment