கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் தேர்வுகளை நடத்த யு.ஜி.சி., திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 21, 2019

கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் தேர்வுகளை நடத்த யு.ஜி.சி., திட்டம்

கல்லூரி மாணவர்களின், கற்றல் திறனை பரிசோதிக்கும் தேர்வுகளை நடத்த, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது



.கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களின், கற்றல் திறனை உயர்த்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல இடங்களில், கல்லுாரி மாணவர்களில், குறிப்பிட்ட சதவீதத்தினர், ஒழுங்காக கல்லுாரிக்கு வருவதில்லை.


 சில இடங்களில், ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துவது இல்லை. அதனால், மாணவர்களிடம் கற்றல் குறைபாடு உள்ளதாகவும், பள்ளிகளை விட கல்லுாரிகளில், 'அரியர்' வைக்கும் மாணவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மத்திய அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.



இதையடுத்து, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, திறனறி சோதனைகளை நடத்த, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.இந்தத் தேர்வு குறித்த நடைமுறைகளையும், பாடத்திட்டத்தையும், யு.ஜி.சி., உருவாக்கியுள்ளது.

 இதுகுறித்து, மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், வரும், 31க்குள், தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment