வீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 22, 2019

வீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மூன்று நாட்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2000 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்காதது வீடு கட்டுவோருக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பது போன்ற செயல்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.


அதன் அடிப்படையில் கலெக்டர் கந்தசாமி 18ல் பி.டி.ஓ.க்கள் 'வாட்ஸ் ஆப்' குழுவில் 'பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை 21ம் தேதிக்குள் வழங்காவிட்டால் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவீர்' என எச்சரித்து 'ஆடியோ' பதிவு அனுப்பினார்.

கலெக்டரின் அதிரடி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மூன்று நாட்களில் 2000 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மீதமுள்ள 6000 பயனாளிகளுக்கு வீடு கட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் அதிலுள்ள இடர்பாடு குறித்து கலெக்டர் கந்தசாமி நேற்று பி.டி.ஓ.க்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

 இதே போல மக்கள் நலத் திட்டங்களில் மற்ற மாவட்ட கலெக்டர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment