தங்கம் கடத்திரதுக்கு ரூம் போட்டு யோசிப்பாங்களோ...அப்படியும் வசமாக சிக்கிய இளைஞர்..!? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 5, 2019

தங்கம் கடத்திரதுக்கு ரூம் போட்டு யோசிப்பாங்களோ...அப்படியும் வசமாக சிக்கிய இளைஞர்..!?

தங்கத்தைப் பையில் வைத்து, ஆடையில் வைத்து, உடைமைகளில் மறைத்து மாட்டிக் கொள்பவர்கள் தான் அதிகம். நாள் தோறும் புதிது புதிதான திருட்டு வகைகள் கண்டு பிடிக்கப் படுகின்றன.ஆனால், சிலரோ கச்சிதமாகத் திட்டம் போட்டு, அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.


 உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்க போல.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நௌஷத், சர்ஷாவிலிருந்து விமானத்தின் மூலம் கொச்சி விமான நிலையம் வந்துள்ளார்தங்கக் கடத்தலில் ஈடுபடும் நௌஷத் பார்க்க டிப் டாப் ஆக உடையணிந்து வந்துள்ளார்.


 விமானங்களிலிருந்து வருபவர்களிடம் வழக்கமாகச் சோதனை நடத்தப் படும், அப்படி நௌஷத்தை சோதனையிடும் போது சுங்கத் துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்துள்ளது.


மோப்பம் பிடித்தே யார் எதனைக் கடத்துகிறார்கள் என்று அறியும் சுங்கத்துறையினருக்கு இவரைக் கண்டுபிடிப்பதா கஷ்டம்.சந்தேகம் ஏற்பட்டவுடன் நௌஷத்திடம் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர், தலையில் நடுவில் உள்ள முடியை மட்டும் வழித்து விட்டு, அங்கு 1.13 கிலோ தங்கத்தை வைத்துக் கொண்டு அதன் மேல் 'விக்' ஐ அணிந்துள்ளதைக் கண்டுபிடித்து விட்டதால் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளார் நௌஷத். இதனையடுத்து, சுங்கத்துறையினர் நௌஷத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment