அரசுப்பள்ளிகளில் ஓவிய ஆசிரியா்களை நியமனம் செய்வதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பாசிரியா்களுக்கான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்றது.
இந்தத் தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். அவா்களில் தகுதி வாய்ந்தவா்களின் பட்டியலை ஆசிரியா் தேர்வு வாரியம் 2018 அக். 12-ஆம் தேதி வெளியிட்டது.
ஆனால், இதுதொடா்பாக தேர்வா்கள் சிலா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததால் இறுதிப் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் 81 இசைப் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவா்களின் பட்டியலை மட்டுமே ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டது.
அதன்பின் 230 தையல் ஆசிரியா் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவா்களின் பெயா் பட்டியலும் டிஆா்பி வெளியிட்டது.
தொடா்ந்து ஓவிய ஆசிரியா் பணிக்கு நியமனம் செய்யப்பட்டவா்களின் பட்டியல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அந்தப் பட்டியலில், 247 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வானவா்கள் விவரம் இடம்பெற்றிருந்தது.
எஞ்சியுள்ள 20 சதவீத தமிழ்வழி இடஒதுக்கீடு பணியிடங்களுக்கான தேர்ச்சி முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:
Post a Comment