நாங்க எங்ககிட்ட இருக்கிற தங்கத்தை விற்கவில்லை... யாரும் சொன்னாலும் நம்பாதீங்க - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 27, 2019

நாங்க எங்ககிட்ட இருக்கிற தங்கத்தை விற்கவில்லை... யாரும் சொன்னாலும் நம்பாதீங்க

ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதாக ஒரு ஊடகத்தில் சில தினங்களுக்கு முன் ஒரு செய்தி வெளியானது. இதனால் ரிசர்வ் வங்கி தங்க விற்பனை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக மக்கள் கருதினர். ஆனால் அதனை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.


மேலும் இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றையும் பதிவு செய்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்பதாகவும்/ வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது.



இந்திய ரிசர்வ் வங்கி எந்த தங்கத்தையும் விற்கவில்லை மற்றும் அதன் வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை என தெளிவுப்படுத்துகிறது என அதில் பதிவு செய்யப்பட்டு இருந்தது



.மற்றொரு பதிவில், மாதந்தோறும் கணக்கிடுவதை வாரந்தோறும் என மாற்றியதால் வாரந்திர புள்ளிவிவர துணை அறிக்கையில் தங்கத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கம் காணப்படும்.


 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மற்றும் பரிவர்த்தனை விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் மறுமதிப்பீட்டில் மாற்றம் ஏற்படுகிறது என பதிவு செய்து இருந்தது



. கடந்த 25ம் தேதி வாரந்திர புள்ளிவிவர துணை அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது. அதன்படி அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1.91 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது

No comments:

Post a Comment