வனக்காவலர் பணிக்கான ஆன்லைன் தேர்வு துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 4, 2019

வனக்காவலர் பணிக்கான ஆன்லைன் தேர்வு துவக்கம்

வனத்துறையில் காலியாக உள்ள, 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, நேற்று துவங்கியது.


தமிழக வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும், 564 வனக் காவலர் பணியிடங்களுக்கான, ஆன்லைன் தேர்வில் பங்கேற்க, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும், நேற்று, 100க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு துவங்கியது.

இன்றும், நாளையும் இத்தேர்வு நடக்கும். சென்னையில், நந்தனம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட மையங்களில் தேர்வு துவங்கியது. அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட வன அலுவலர்கள், வன சரகர்கள், தேர்வு நடைமுறைகளை மேற்பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment