போனஸ் வந்ததற்கும் சுவாரஸ்யமான வரலாறு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 23, 2019

போனஸ் வந்ததற்கும் சுவாரஸ்யமான வரலாறு

பண்டிகைக் காலம் நெருங்கி விட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி.. இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது.?

போனஸ் என்றால் என்ன?


போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவிற்கோ அவர்களின் முந்தைய பணிநாட்களில் சிறப்பாகப் பணிபுரிந்து நிர்வாகத்திற்கும், நிறுவனத்திற்கும் லாபம் சேர்த்துக் கொடுத்ததானாலோ அல்லது நிறுவனத்திற்கு வெற்றி தேடித்தந்து

ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைந்ததற்காகவோ அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை என்று கூறலாம்.போனஸ் வரலாறு
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.


அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930-ம் ஆண்டு வாக்கில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின. தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின. 10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


இதையடுத்து 1940-ம் வருடன் ஜுன் மாதம் 30-ம் தேதி இந்தியாவில் முதன் முதலாக இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. இதுதான் முதல் போனஸ்.

அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டது...!!

பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது

No comments:

Post a Comment