இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 23, 2019

இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்

சென்னையில் தற்போது பேருந்துப் பயணிகள் கூட அதிகம் விரும்பும் போக்குவரத்து சாதனமாக மெட்ரோ ரயில் மெல்ல மாறி வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய சிப் பொருத்திய இந்த கைக்கடிகாரத்தை டைட்டன் வாட்ச் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.


இந்த கைக்கடிகாரத்தை பயணிகள் ரூ.1000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்இந்த கைக்கடிகாரத்தை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள மிஷினில் காண்பித்தால் தானாக கதவுகள் திறக்கும். எளிதில் உள்ளே செல்ல முடியும். ஒவ்வோரு முறையும் டிக்கெட் எடுக்கக் காத்திருக்கத் தேவையில்லை.


முதற்கட்டமாக ரூ.1000 முதல் ரூ.1500 வரை பல்வேறு மாடல்களில் இந்த கடிகாரங்கள் கிடைக்கும் என்றும், ஒவ்வொரு மாதமும், இதனை சீசன் பாஸ் எடுப்பது போல ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

இனி ஸ்மார்ட் வாட்ச் கட்டினால், ஸ்மார்ட்டாக மட்டுமல்ல, மெட்ரோ ரயில்நிலையங்களில் ஜம்மென்று பயணிக்கவும் முடியும் என்கிறார்கள் பொதுமக்கள்.

No comments:

Post a Comment