இந்தியாவின் கவுரவத்தை உலகளவில் தூக்கி நிறுத்திய தமிழக சிறுவன்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 13, 2019

இந்தியாவின் கவுரவத்தை உலகளவில் தூக்கி நிறுத்திய தமிழக சிறுவன்!

தமிழகத்தை சேர்ந்த 14 வயது சிறுவனான பிரக்ஞானந்தா உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க வென்று அசத்தினார்.


மும்பையில் நடைபெற்ற உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 66 நாடுகளை சேர்ந்த சுமார் 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்திய சரபாக பங்கேற்ற வீரர் பிரக்ஞானந்தா, 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 4 போட்டிகளை டிரா செய்தார்.இதனைத்தொடர்ந்து, இறுதி போட்டியில் டிரா செய்தால் புள்ளிகளின் அடிப்படையில் தான் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, ஜெர்மனி வீரர் வேலண்டினை எதிர்கொண்டார்.மிக நுணுக்கமாக விளையாடி இறுதி போட்டியை டிரா செய்தார்.


இறுதி போட்டியை டிரா செய்ததன் மூலமாக பிரக்ஞானந்தா, தங்க பதக்கத்தை வென்றார்.

இது நாள் வரை இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றிருந்த பிரக்ஞானந்தா, தற்போது உலக சாம்பியின்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment