இதே நாளில் அன்று - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 28, 2019

இதே நாளில் அன்று

திருச்சி அருகே உள்ள திருப்பராய்த்துறையில், 1931, அக்., 29ல் பிறந்தார்



. பின், அவரது குடும்பம், ஸ்ரீரங்கத்துக்கு குடிபெயர்ந்தது. இயற்பெயர், ரங்கராஜன். சென்னை ஓவியக் கல்லுாரியில், ஓராண்டு படித்தார். ஓவியர் மாலி போல ஆக வேண்டும் என, தன் பெயரை, வாலியென மாற்றினார்.



எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர், ரஜினி, விஜய், தனுஷ் என, ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.எம்.ஜி.ஆரின் கருத்துகளை, 'நான் ஆணையிட்டால், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' உட்பட பல பாடல்கள் வாயிலாக, மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை, கவிஞர் வாலிக்கு உண்டு. 15 ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளார்; 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர்.


 வடைமாலை என்ற படத்தை, மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதத்தை கவிதை வடிவில் படைத்தார். சில படங்களிலும் நடித்துள்ளார். 2013 ஜூலை 18ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று!

No comments:

Post a Comment