தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 24, 2019

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல் - எர்ணாகுளம் ஜங்ஷன் இடையே சுவீதா சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.50 மணிக்கு எர்ணாகுளம் ஜங்ஷன் சென்றடையும். அதேப்போல், நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று  9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.


 மேலும் தாம்பரம் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் நாளை இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கொச்சுவேலிக்கு முன்பதில்லா ரயில் இயக்கம்:  தாம்பரம்- ெகாச்சுவேலி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம்- கொச்சுவேலி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் 26ம் தேதி காலை 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment