பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் புதிய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 22, 2019

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் புதிய உத்தரவு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் கழிவுகளை தனியே சேகரிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.


பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாடாக மாற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அந்த வரிசையில், உள்ளாட்சிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தனியே சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.


பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து தனியே சேகரிக்கவும், மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவை முறையாக பின்பற்றி, பிளாஸ்டிக் கழிவுகளை தனி கூடையில் சேகரிக்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

No comments:

Post a Comment