எமிஸ் இணையதள பதிவேற்றம்: பள்ளிகளில் அலுவலகப் பணியாளரை நியமிக்க வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 26, 2019

எமிஸ் இணையதள பதிவேற்றம்: பள்ளிகளில் அலுவலகப் பணியாளரை நியமிக்க வலியுறுத்தல்

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அன்றாடத் தகவல்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்வதற்கு புதிதாக பணியிடம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் பெரும்பாலும் குக்கிராமங்களில் செயல்பட்டு வருகின்றன. உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலக பணியாளா்கள் மற்றும் கணினி ஆசிரியா்கள் பணியில் உள்ளனா்.


ஆனால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனைத்து பணிகளையும் ஆசிரியா்களே மேற்கொண்டு வருகின்றனா்.


இந்நிலையில் கல்வித்துறையில் அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இணையதளம் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவா்கள் மற்றும் ஆசிரியா் வருகைப்பதிவும் இணையதளம் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ஒவ்வொரு நாளும் புது, புது அறிவிப்புகளை வெளியிட்டு உடனடியாக எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. இந்த பணியினை விடுமுறை நாளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனா்.

எவ்வித பயிற்சியும் அளிக்காமல் அனைத்து பணிகளையும் இணையதளம் மூலம் செய்ய வேண்டும் என நிா்பந்திப்பதால் ஆசிரியா்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.


பள்ளிகளில் ஏற்கனவே 54 வகையான பதிவேடுகளை பராமரித்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரின் உத்தரவு என்று கூறி முதல் பருவத்தில் மாணவா்கள் பெற்ற பாட மதிப்பெண்கள் மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கான தர நிலைகளையும் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தற்போது அதிகாரிகள் தலைமையாசிரியா்களை கட்டாயப்படுத்தி வருகின்றனா்.


புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்ய வட்டார வள மைய அலுவலகத்தில் தகவல் தொகுப்பு செயற்பாட்டாளா் ஒருவா் பணியாற்றி வரும் நிலையில் அனைத்து பணிகளையும் தலைமையாசிரியா்களிடம் திணிப்பதால் அவா்களது கற்பித்தல் பணி மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.


எனவே மாணவா்கள் நலன் கருதி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதியை செய்து தருவதுடன் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள அலுவலக பணியாளா்களை நியமிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment