தேர்வுக்கு முந்தைய நாள் படித்து தேர்ச்சி பெறும் மாணவரா நீங்கள்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 21, 2019

தேர்வுக்கு முந்தைய நாள் படித்து தேர்ச்சி பெறும் மாணவரா நீங்கள்?

இளநிலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர யூஜிசி என்ற பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளதுள்ளதாகவும் இதன்மூலம் மாணவர்களின் மனப்பாட முறையை ஒழிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது


பல மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாட்கள் மட்டும் படித்துவிட்டு குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்களை பெற்று பட்டங்களை பெறும் நிலை அதிகரித்து வருவதை அடுத்து தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர யுஜிசி முடிவு செய்துள்ளது.



அதன்படி புதிய முறையில் இறுதித்தேர்வுக்கு 30 மதிப்பெண்களும், ஆண்டு முழுவதும் மாணவர்கள் மேற்கொள்ளும் திறன் கற்றல் வகை நடவடிக்கைகளுக்கு 70 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும்.இதில் பெறும் மதிப்பெண்களின்படி மாணவர்கள் தேர்ச்சி நிர்ணயிக்கப்படும்.

இதனால் இனி தேர்வுக்கு ஒரு வாரம் முன் மட்டும் படித்துவிட்டு தேர்ச்சி பெற்று பட்டம் பெற முடியாது என்பதும் ஆண்டு முழுவதும் புரிந்து படித்தே ஆகவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment