மழை காலங்களில் மின் விபத்துக்களை தடுப்பது எப்படி? - மின்வாரியம் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 7, 2019

மழை காலங்களில் மின் விபத்துக்களை தடுப்பது எப்படி? - மின்வாரியம் விளக்கம்

வடகிழக்கு பருவ மழை தொடங்குவதையொட்டி மின்விபத்துக்களை தவிர்க்க மின்வாரியம் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.


மழை காலங்களில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பி மற்றும் மின் கம்பங்களை தொட வேண்டாம். இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில நிற்கக்கூடாது. ஈரமான கையுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது.

மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டவேண்டாம். அதில் கொடி, கயிறு கட்டி துணிகளை காயவைக்கும் செயல்களையும் தவிர்க்கவும்.

மழையின்போது மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 மின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுத்திருக்க வேண்டும்.

குளியல், கழிப்பறைகளில் சுவிட்சுகள் பொருத்துவதை தவிர்க்க வேண்டும். இடி-மின்னலின்போது மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவையின் கீழ் நிற்கக்கூடாது.


மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு கீழ் மற்றும் அருகில் நின்று செல்போன் பேசக்கூடாது. மழை காலங்களில் மின் தொடர்பான புகார்களை 0452-1912 மற்றும் 0452- 2560601 என்ற எண்களில் தெரிவிக்கலாம். மேலும் 94431-11912 என்ற வாட்-அப் எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment