மாணவர்களுக்கான உதவித்தொகை விவகாரம் : மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 15, 2019

மாணவர்களுக்கான உதவித்தொகை விவகாரம் : மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் மத்திய அரசின் உதவியுடன் உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

2012ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திவந்த இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்து, 2018- 19ஆம் கல்வியாண்டு முதல், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கக்கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த  உத்தரவுகளையும் ரத்து செய்யக்கோரி தென்காசியைச் சேர்ந்த  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்து, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment