டெஸ்ட் போட்டியில் டாஸ் போடாதீங்க: கேப்டன் கருத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

டெஸ்ட் போட்டியில் டாஸ் போடாதீங்க: கேப்டன் கருத்து

டெஸ்ட் போட்டியில் 'டாஸ்' போடும் நிகழ்வை நீக்க வேண்டும்,'' என, தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி தெரிவித்தார்.


சமீபத்தில் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, இந்திய அணி 3-0 என முழுமையாக வென்று அசத்தியது. மூன்று போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி 'டாஸ்' வெல்லவில்லை.


 ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்டில், 'டாஸ்' நிகழ்வுக்கு, சக வீரர் பவுமாவை அழைத்து சென்றும் பலன் தரவில்லை.

இது குறித்து டுபிளசி கூறியது: இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், கேப்டன் விராத் கோஹ்லி 'டாஸ்' வென்று பேட்டிங் செய்தார்.

முதல் இன்னிங்சில் 500 ரன்களை எட்டிவிட்டனர். வெளிச்சம் குறைந்த நேரத்தில், 'டிக்ளேர்' செய்தனர். இதன்பின், முதல் இன்னிங்சில் எங்கள் அணியின் மூன்று விக்கெட்டை எளிதாக வீழ்த்திவிட்டனர்.


இதன் காரணமாக, போட்டியின் மூன்றாவது நாளில் எங்களுக்கு நெருக்கடி துவங்கிவிட்டது. எட்ட முடியாத இலக்கை விரட்டும்போது, வீரர்கள் மனதளவில் பலத்தை இழக்கின்றனர்.

இத்தொடரின், மூன்று போட்டிகளிலும் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்தது. கணிப்பொறியில் செய்யப்படும் 'காப்பி அன்ட் பேஸ்ட்' போல காணப்பட்டது. இதை தவிர்க்க, டெஸ்ட் போட்டிகளில் 'டாஸ்' நிகழ்வை நீக்கவிட்டால் நல்லது. இது, அன்னிய மண்ணில் விளையாடும் அணியினர் சிறப்பாக செயல்பட கைகொடுக்கும்.



தற்போதைய நிலையிலிருந்து அணி மீண்டு வர, முன்னாள் வீரர்கள் தாராளமாக தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். அணியின் முன்னேற்றத்திற்கு தேவையான பங்களிப்பை தரலாம். இவ்வாறு டுபிளசி தெரிவித்தார்.

No comments:

Post a Comment