எந்தெந்த விரல்களால் விபூதியை பூச வேண்டும்.?! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 12, 2019

எந்தெந்த விரல்களால் விபூதியை பூச வேண்டும்.?!

இன்றைய காலகட்டத்தில் நெற்றியில் விபூதி மற்றும் சந்தனம் இடும் பழக்கமானது பெரும்பாலான மக்களிடம் காணப்படுவதில்லை.


கடவுள்களை அவசர அவசரமாக வணங்கிவிட்டு பள்ளிக்கும் பணிகளுக்கும் செல்லும் பலர் தங்களின் நேரமின்மையால் பெரும்பாலும் இந்தப்பழக்கத்தினை இழந்து வருகின்றனர்.

மேலும் திருவிழாக்காலங்களில் மட்டும் நெற்றியில் பட்டை அடித்து கொள்கின்றனர்.



மேலும் தற்போதுள்ள அனைவரிடம் உள்ள ஒரு தீயபழக்கம் என்னவென்றால் நெற்றியில் பட்டையோ அல்லது சந்தானமோ இட்டால் அவனை பழம் என்று அடைமொழி வைத்து அவனை சீண்டுவதாலும் பலர் இது போன்ற நல்ல பழக்கவழக்கங்களில் இருந்து தங்களை விளக்கி கொள்கின்றனர்.

நெற்றியில் திலகம் இடுவதால் ஏற்படும் நன்மைகள் இன்றுள்ள பல்வேறு நபர்களுக்குத் தெரிவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.


மேலும் அதனை எந்த விரலால் இடவேண்டும் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை. நெற்றியில் இடும் விபூதியை வைப்பதற்கு நாம் எந்தெந்த விரல்களை உபயோகம் செய்யவேண்டும்., எந்தெந்த விரல்களை உபயோகம் செய்யக்கூடாது என்பதற்கு நமது முன்னோர்கள் வந்த காலத்திலேயே நமக்கு கூறிவிட்டனர்



.நமது கையில் உள்ள கட்டை விரலால் விபூதியை தொட்டு அணியும் பட்சத்தில் தீராத சிலவகை நோயானது வரும். நமது ஆட்காட்டிவிரல் மூலமாக விபூதியை பூசும் பட்சத்தில் பொருட்கள் நாசம் ஏற்படும்.

நமது நடுவிரல் மூலமாக விபூதியை பூசும் பட்சத்தில் வாழ்க்கையில் நிம்மதியின்மை ஏற்படும்.

நமது சுண்டு விரலால் விபூதியை பூசும் பட்சத்தில் நமது வாழ்க்கையில் ஏற்படும் கிரகதோஷங்களுக்கு தாக்கத்தினை அதிகமாக ஏற்படும்.


நமது மோதிர விரல் மற்றும் கட்டை விரல் சேர்த்தபடி விபூதியை எடுத்து பூசும் பட்சத்தில் இந்த உலகமானது நமது வசத்திற்குள் வரும் என்றும்., நாம் எந்த ஒரு செயலுக்கும் எடுக்கும் முடிவானது அல்லது முயற்ச்சியானது பெரும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment