மறைந்த விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான, அப்துல் கலாமின் பிறந்த நாள், இன்று இளைஞர் எழுச்சி நாளாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த, கலாமை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாள், தமிழகத்தில், இளைஞர் எழுச்சி நாளாக, 2015 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அறிவியல் சார்ந்த கட்டுரை போட்டி நடத்துவது, அறிவியல் கண்காட்சி மற்றும் இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடத்துதல் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்று அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், கை கழுவுவதன் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என, உத்தரவிடப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment