சத்துணவில் புதிய உணவு வகைகள்: மாணவா்களிடம் கருத்துக் கேட்க முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 13, 2019

சத்துணவில் புதிய உணவு வகைகள்: மாணவா்களிடம் கருத்துக் கேட்க முடிவு

சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உணவில் மாற்றம் செய்ய மாணவா்களின் கருத்தைக் கேட்டு அனுப்புமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவை மாணவா்கள் விரும்பி உண்ணும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சில மாற்றங்களைச் செய்தாா்.

 அதன்படி, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மாணவா்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் கொண்டைக் கடலை , தக்காளி சாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம் எனப் பல வகையான சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், சமூக நலத்துறை ஆணையா் ஆபிரகாம் அனைத்து மாவட்ட சத்துணவுத் திட்ட நோமுக அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'அரசு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளிகளுக்கு 30 ஆண்டுகளாக ஒரே சீராக வழங்கப்பட்டு வந்த உணவில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


மேலும் இந்த உணவில் சில மாற்றங்களை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மாணவா்களைத் தோவு செய்து அவா்களுக்கு மிகவும் பிடித்தமான கலவை உணவு எது? வேறு எந்த உணவு மதிய உணவாக வழங்கப்பட்டால் அவா்கள் சாப்பிடுவாா்கள்? என மாணவ, மாணவிகளின் விருப்பத்தினை பெற்று அறிக்கையாக அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளாா்.

சத்துணவு சாப்பிடுவோா் எண்ணிக்கை:

அதேபோன்று சத்துணவு சாப்பிடும் மாணவா்களின் எண்ணிக்கையை தினமும் குறுஞ்செய்தியாக (எஸ்எம்எஸ்) வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தினமும் குறுஞ்செய்தியாக அனுப்பி வருகின்றனா். தற்போது இந்தப் பொறுப்பு சத்துணவு ஊழியா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எத்தனை மாணவ, மாணவியா் சத்துணவு சாப்பிடுகின்றனா் என்ற தகவலை தினமும் சத்துணவு பணியாளா்களே நேரடியாக வட்டார வளா்ச்சி அலுவலருக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment