ஜியோ நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ள புதிய திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 26, 2019

ஜியோ நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ள புதிய திட்டம்

ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட மற்ற நெட்ஒர்க்களுக்கு ஜியோ நெட்ஒர்க்கில் இருந்து செய்யப்படும் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் ஜியோ நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் ஜியோ நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 'ஆல் இன் ஒன்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நான்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன்படி 75 ரூபாய் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 500 நிமிடங்கள் கட்டணம் இல்லாமல் ஏர்டெல், வோடாஃபோன், பிஎஸ்.என்.எல் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர்களுக்கு அழைத்து பேசலாம்.


 அத்துடன் மொத்தம் 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.மேலும், 125 ரூபாய் திட்டத்தில் பிற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 500 நிமிட கட்டணம் இல்லா அழைப்பு வசதி மற்றும் 14 ஜிபி டேட்டா வழங்கப்படும்.


அதேபோல 155 ரூபாய் திட்டத்தில் பிற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 500 நிமிட இலவச அழைப்பு வசதி மற்றும் 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது.


185 ரூபாய் திட்டத்தில் பிற நிறுவனங்களுக்கு 500 நிமிட இலவச அழைப்பு 56 ஜிபி டேட்டா. இந்த அனைத்து திட்டங்களும் ஒரு மாதம் வேலிடிட்டி உடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment