ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 15-ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த 4-10-2019 அன்று வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விண்ணப்பதாரர்கள், பணிபுரிந்த கல்லூரிகளில் பணி அனுபவச் சான்று, வருகைப் பதிவேடு நகல் உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற காரணங்களால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக டிஆர்பி சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
பல்வேறு தரப்பினரிடமிருந்து கா லநீட்டிப்பு செய்ய வேண்டி கோரிக்கைகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை வரும் நவம்பர் 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment