தேர்வு முறைகேடுகளை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 26, 2019

தேர்வு முறைகேடுகளை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவி

தேர்வு முறைகேடுகளை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை பொருத்த பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை எழுப்பியுள்ளது.


அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் பொதுத்தேர்வின் போது பட்டவர்த்தனமாக மாணவர்கள் காப்பியடித்த விவகாரம் வெளியானது. சமீபத்தில் கர்நாடகத்தில் நடந்த தேர்வின்போது மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க ஒவ்வொருவருவருக்கும் அட்டைபெட்டியை அணிவித்தனர்



. அதேநேரத்தில் தற்போது பொதுத்தேர்வுகள், அரசுப்பணியாளர் தேர்வாணையம், குரூப்-1 முதல் குரூப்-4 வரையும், யுபிஎஸ்சி தேர்வுகள், பல்கலைக்கழக தேர்வுகள் என நடக்கும்போது செல்போன், புளூடூத், பென்டிரைவ், கால்குலேட்டர் என எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பது தொடர்ந்து வருகிறது.


இந்நிலையில், பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை 100 மீட்டர் சுற்றளவுக்குள் தகவல் தொடர்புகளை பிளாக் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்படி பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


 இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டுள்ளது.


இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, 'பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல் மட்டுமே வழங்கியுள்ளது. இப்போதே தேர்வு மையங்களில் செல்போன்கள், பென்டிரைவ், டேப்லெட், கால்குலேட்டர், புளூ டூத் என எதையும் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. அதையும் தாண்டி ஜாமர் கருவி பொருத்த வேண்டும் என்ற அறிவுரையையும் தவிர்க்க இயலாது' என்று கூறினர்.

No comments:

Post a Comment