ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 30, 2019

ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது.



இதனால் 13 அரசு பல்கலைக்கழகங்களில் ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.



இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களின் தகுதித் தேர்வு குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து கூடுதலான ஊழியர்களை வெளியேற்றுவதற்கு புதிய ஆசிரியர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.


உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு புதிய ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.


 இதனால் கடந்த கல்வியாண்டில் இந்த தடை நீடித்து வந்தது. தற்போது இந்த தடையை விலக்கிக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பல்கலைக்கழகங்கள் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment