இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டத்திற்கு ஒப்புதல் அளி்க்கப்பட்டுள்ளது.



விவசாயிகளின் வருமானம் பெருக இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய சட்டத்தின் படி விவசாய உற்பத்தியை பெருக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி போன்ற விவசாயிகள் சந்திக்கும் பாதிப்பை தடுக்க புதிய சட்டம் வழி வகுக்கும். விளைபொருட்களை முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய புதிய சட்டம் வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் வேளாண் விற்பனை அலுவலர் முன்னிலையில் உற்பத்தியாளருடன் ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகள் நலனை காக்க அரசு இயற்றிய சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த பண்ணைய சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டு விதிகளை வகுத்து செயலாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சட்டத்தை முழு செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment