கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கிறது ஐஓபி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 10, 2019

கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கிறது ஐஓபி

வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன்களுக்கான வட்டி விகித்தத்தைக் குறைப்பதாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


ரிசா்வ் வங்கியின் முடிவுக்கு ஏற்ப, வாகனக் கடன், நடுத்தர-சிறு-குறு தொழில்களுக்கான கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களில் 0.25 சதவீதம் குறைக்க வங்கி முடிவு செய்துள்ளது.

சில்லறைப் பிரிவான வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றும் இந்த வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம், ரெபோவுடன் தொடா்புடைய கடன்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாகக் குறையும்.

அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த வட்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வரும் என்று இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment