எல்லா அக்கவுண்டுக்கும் ஒரே பாஸ்வேர்டா.? கூகுள் என்ன சொல்றார் தெரியுமா.?! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 12, 2019

எல்லா அக்கவுண்டுக்கும் ஒரே பாஸ்வேர்டா.? கூகுள் என்ன சொல்றார் தெரியுமா.?!

கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. இரண்டில் ஒருவர் தான் வைத்திருக்கும் அனைத்து கணக்குகளும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்துவதாக அதில் கூறியுள்ளது.


ஃபேஸ்புக், ட்விட்டர், வங்கி கணக்கு, ஜிமெயில் என எல்லாவற்றிற்கும் ஒரே பாஸ்வேர்டை தான் அனைவரும் பயன்படுத்துகின்றோம்.


பொதுவாக கடவுச்சொல்லை பொருத்தவரை அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெரிய எழுத்து, சிறிய எழுத்து, குறியீடுகள் என கலவையாக தான் பயன்படுத்த கோரும்.எனவே நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்பட்டு நம்மில் பலர் ஒரே கடவுச்சொல்லை தான் எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவோம்



.இது போல ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்துவதன் காரணமாக நம்முடைய அனைத்து கணக்குகளையும் ஒரே நேரத்தில் கையில் எடுக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உங்களின் ஏதேனும் ஒரு கணக்கின் கடவுச்சொல்லை மட்டும் ஹேக் செய்தாலே போதும் அனைத்தையும் எளிதில் எடுத்து விட முடியும். ஒரு வேலை நீங்கள் எல்லாவற்றிற்கும் ஒரே கடவுச்சொல்லை வைத்து இருந்தால் உடனடியாக அதை மாற்றிவிடுங்கள்.

No comments:

Post a Comment