ஸ்டார்ட் அப் மாணவருக்கு கட்டாய வருகைப்பதிவில் இருந்து விலக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 13, 2019

ஸ்டார்ட் அப் மாணவருக்கு கட்டாய வருகைப்பதிவில் இருந்து விலக்கு

ஸ்டார்ட் அப்' முயற்சியில் ஈடுபடும், பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு, தேர்வு எழுதுவதற்கு, கட்டாய வருகைப்பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

மத்திய அரசு, 'ஸ்டார்ட் அப்' திட்டங்களை ஊக்குவித்து வருகிறது.


குறிப்பாக, இளைஞர்கள் அதிகளவில், தொழில் முனைவோராக, பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. 'பொறியியல் கல்லுாரி மாணவர்கள், வேலை தேடுவோராக இல்லாமல், வேலை வழங்குவோராக விளங்க வேண்டும்;

கல்லுாரியில் படிக்கும் போதே, புதுமை ஐடியாக்களுடன், ஸ்டார்ட் அப் துவங்குவதற்கும், தொழில் முனைவோராக உருவெடுப்பதற்கும் ஊக்குவிக்க வேண்டும்' என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட அளவு வருகைப்பதிவு இருந்தால் தான், செமஸ்டர் உள்ளிட்ட தேர்வுகளை, பொறியியல் கல்லுாரி மாணவர்கள் எழுத முடியும்' என்ற விதி உள்ளது. தற்போது, இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது.


பொறியியல் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஸ்டார்ட் அப் துவங்கி உள்ள மற்றும் தொழில்முனைவு முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, வருகைப்பதிவில் இருந்து விலக்களிக்கலாம். 'அந்தந்த கல்லுாரிகளில் உள்ள ஆய்வுக்குழு, இதுதொடர்பாக முடிவெடுக்கலாம் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment