ரயில் டிக்கெட் ரத்துக்கு O.T.P - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

ரயில் டிக்கெட் ரத்துக்கு O.T.P

அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் 'ஆன்லைன்' வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டது என்பதை பயணியர் அறிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.


எனவே ஏஜென்ட் கொடுக்கும் தொகையை பயணியர் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை இருந்தது.


இதையடுத்து ஆன்லைன் டிக்கெட்களை ஏஜென்ட் ரத்து செய்யும் போது பயணியரின் 'அலைபேசிக்கு ஓ.டி.பி.'எண் அனுப்பும் நடைமுறையை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.


இந்த கடவுச்சொல்லை ஏஜென்ட்டுக்கு அனுப்பி பயண சீட்டை ரத்து செய்து கொள்ளலாம். இதன் மூலம் ரத்து செய்யப்படும் பயண சீட்டுக்கு எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கிறது என்பதை பயணியர் அறிந்து கொள்ள முடியும். மேலும் பயணியர் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment