தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி இயக்குனரகத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க போவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கான பாடத் திட்டத்தை பள்ளிக்கல்வி இயக்குனரகம் மற்றும் கல்வித்துறை தயாரித்து வெளியிட உள்ளது
.மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிப்பதற்கு முன்பாக அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மேலும் குறைந்தபட்சமாக வாரம் 1 முறையாவது மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:
Post a Comment