தமிழக அரசில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அதிகாரி வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 12, 2019

தமிழக அரசில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அதிகாரி வேலை

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள உதவி பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


மொத்த காலியிடங்கள்: 05

பணி: Assistant Section Officer in Tamil - 04
பணி: Assistant Section Officer in Hindi - 01


தகுதி: பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த பல்கலைக்கழகத்தின் பாடப்பிரிவில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இதேபோன்று இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ் குறித்த போதுமான அறிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net , www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_31_notyfn_ASOTrans.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.12.2019
Click here to download

No comments:

Post a Comment