உலகின் டாப் 100 சிட்டியில் இந்தியாவின் ஒரே இடம் இது மட்டும் தானாம்?! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 23, 2019

உலகின் டாப் 100 சிட்டியில் இந்தியாவின் ஒரே இடம் இது மட்டும் தானாம்?!

உலகம் முழுவதும் இருக்கும் நகரங்களில், சமூக மற்றும் பொருளாதார வளம் கொண்ட டாப் நூறு நகரங்களின் லிஸ்ட்டில் இந்திய நகரம் ஒன்று இடம் பிடித்து அசத்தியுள்ளது.

 இந்தியாவில் இருந்து இந்த ஒரேயொரு நகரம் மட்டும் தான் டாப் நூறு சிட்டிகளில் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது. 100 நகரங்களின் பட்டியலில் 83வது இடம் பிடித்து அசத்தியுள்ள அந்த இந்திய நகரம் எது தெரியுமா?


 அதற்கு முன்னால் அந்த பட்டியல் குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.வெறுமனே நகரின் பொருளாதாரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு பணக்கார நகரங்களின் பட்டியலாக தயாரிக்கவில்லை.

அந்த லிஸ்ட் முழுக்கவே உலகம் முழுவதும் ஆய்வு செய்து, நகரின் மக்கள் அனைவருக்குமான அடிப்படை வளர்ச்சி, நகரின் தரம், இயற்கை வளங்கள் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த பட்டியலைத் தயாரித்துள்ளனர்.



இந்த பட்டியலில் 83வது இடத்தைப் பிடித்திருக்கும் இந்திய நகரம் பெங்களூரு. முதலிடத்தை சுவிச்சர்லாந்தின், சூரிச் நகரம் பிடித்துள்ளது. அதே சமயம் இந்த லிஸ்ட்டில் டெல்லி 101வது இடத்திலும், மும்பை 107வது இடத்திலும் உள்ளன. முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே இந்திய நகரம் என்ற பெருமையை, பெங்களூரு பெற்றுள்ளது.

பெங்களூரு நகரில், தனிநபரின் வளர்ச்சி மட்டுமல்லாமல், வீட்டுவசதி, கல்வி, சுகாதார வசதி போன்றவைகளிலும் மற்ற இந்திய நகரங்களை விட முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment